கோட்டாபயவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் நம்பகமில்லாத நிலைமையும்

Protest Colombo Sajith Premadasa Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis
By Jenitha Apr 10, 2022 05:22 PM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. திரும்பும் திசையெல்லாம் ‘கோட்டா கோ ஹோம்’என்ற எதிர்ப்பு அலையே கோலோச்சியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ‘GoHomeGotta’ என்ற பரப்புரை சமர் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும், ஜனாதிபதி பதவி விலகமாட்டார் என ஆளுங்கட்சியினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், ‘WeWantGotta’ என அவருக்கு சார்பாக மக்களையும் அணிதிரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் அரசியல் நெருக்கடியும் உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை தொடர்பில் எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக சில கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

குற்றப் பிரேரணை என்றால் என்ன?

மக்கள் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி பதவி விலகாவிட்டால், அடுத்தக்கட்டம் என்ன? அரசியலமைப்பு ரீதியில் அவரை எப்படி பதவி நீக்கம் செய்யலாம் என்பதே பலர் தொடுக்கும் கேள்விக்கணையாக உள்ளது.

இதற்கு ‘குற்றப் பிரேரணை’ என்பதே பதில். அதனால்தான் ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவரும் முயற்சியில் ஐக்கிய மக்கள் சக்தி இறங்கியுள்ளது.

ஜனாதிபதிக்கெதிராகக் குற்றப்பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து ஜனாதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் வழி முறைகளைப் பற்றி அரசியலமைப்பில் 38 (2) ம் உறுப்புரையின்படி விளக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கக்கூடிய குற்றச்சாட்டுகள் எவை?

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியில் இருப்பவருக்கு எதிராக 6 விடயங்களை மையப்படுத்தியதாக குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கு அரசமைப்பில் ஏற்பாடுகள் உள்ளன.

1978 இல்தான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை உள்ளடக்கிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இன்றளவிலும் அந்த அரசமைப்பே நடைமுறையில் உள்ளது.

இதுவரை 20 தடவைகள் அரசமைப்பு மறுசீரமைக்கப்பட்டிருந்தாலும் குற்றப் பிரேரணையை முன்வைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் வரவில்லை.

அப்படியாயின் எவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும் 

1.பதவிக்காலத்தில் இறத்தல்.

2. தன் கைப்பட இராஜினாமாவை சபாநாயகருக்கு சமர்ப்பித்தல்.

3. இலங்கைப் பிரஜை என்ற அந்தஸ்தை இழத்தல்.

4.பதவிக்காலம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் பதவி ஏற்காதுவிடல்.

5.38 (2) ல் ஏதேனும் குற்றச்சாட்டின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால்.

6. 130 (அ) உறுப்புரைப்படி ஜனாதிபதியின் தெரிவு பிழையானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினால்

என மேற்படி காரணிகளில் ஏதேனும் ஒரு விடயத்தை அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணிகளை முன்வைத்து, அது அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமெனகோரி, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் குற்றப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்க முடியும்.

குறித்த குற்றப் பிரேரணையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை எம்.பிக்கள் கையொப்பமிட வேண்டும் (150). அதற்கு குறைவான எண்ணிக்கையிலான கையொப்பம் இருந்தால் குற்றப் பிரேரணையை சபாநாயகர் நிராகரிக்க முடியும்.

அத்துடன், மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினராவது - அதாவது 113 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் கையொப்பமிட்டு கூட குற்றப்பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கலாம்.

ஆனால் மேற்படி குற்றப்பிரேரணையில் ஏற்றுக்கொளளக்கூடிய விடயம் அல்லது விடயங்கள் உள்ளன, அது தொடர்பில் அல்லது அவை தொடர்பில் உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தலாம் என சபாநாயகர் கருதினால் அதனை ஏற்பார். இல்லையேல் குற்றப் பிரேரணையை நிராகரிக்கும் அதிகாரம் அவருக்கு உள்ளது.

குற்றப் பிரேரணையை சபாநாயகரால் ஏற்றுக்கொள்ளப்படுமிடத்து

நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் ஏற்கும் பட்சத்தில், நாடாளுமன்ற ஒழுங்கு புத்தகத்தில் குற்றப் பிரேரணை உள்ளடக்கப்படும். அதன்பின்னர் குற்றப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்.

விவாதத்துக்கான காலப்பகுதி சபாநாயகர் தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

விவாதத்தின் பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும். பிரேரணை நிறைவேற்றிக்கொள்வதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகள் (150) அவசியம். அவ்வாறு 150 பேர் அல்லது அதற்கு மேற்பட்டோர் ஆதரித்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும். (சிலவேளை, நாடாளுமன்றத்தில் போதுமானளவு வாக்குகள் கிடைக்கப்பெறாவிட்டால் குற்றப்பிரேரணை வலுவிழக்கும்)

குற்றப் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் பட்சத்தில், அப்பிரேரணையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அல்லது குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக குற்றப் பிரேரணை, சபாநாயகரால் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்படும்.

உயர்நீதிமன்ற விசாரணையின்போது தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தாமாகவோ அல்லது தனது சட்டத்தரணி ஊடாகவோ தெளிவுபடுத்தும் உரிமை - வாய்ப்பு ஜனாதிபதிக்கு உள்ளது.

ஜனாதிபதி குற்றவாளியாகி இருக்கின்றார் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் பட்சத்தில், குற்றப் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்படும். அதன்போதும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவு அவசியம். குற்றமற்றவர் என உயர்நீதிமன்றம் கருதினால் குற்றப் பிரேரணை வலுவிழக்கும்.

தற்போதைய நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை வகிப்பவர், ஆளுந்தரப்புக்கு விசுவாசமாக செயற்படக்கூடியவர் என்ற விமர்சனம் உள்ளது. மறுபுறத்தில் 150 உறுப்பினர்களின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்திக்கு இல்லை.

தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் அணிகளின் ஆதரவை திரட்டினால்கூட சாதாரண பெரும்பான்மை என்ற இலக்கையே அக்கட்சியால் அடையமுடியும்.

20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த முஸ்லிம் எம்பிக்கள், அரவிந்தகுமார், டயானா உட்பட ஆளுங்கட்சி பக்கம் தற்போது உள்ளவர்களுள் 35 இற்கும் மேற்பட்டோரின் ஆதரவு திரட்டப்படுமானால் குற்றப் பிரேரணை ஊடாக 'நிறைவேற்று அதிகாரத்துக்கு' சவாலை கொடுக்கலாம்.

ஆனால் இதற்கான சாத்தியப்பாடும் குறைவு. அதேபோல அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் உயர்நீதிமன்றத்துக்கான நியமனங்கள், ஜனாதிபதியால் வழங்கப்படுகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் - குற்றப்பிரேரணையொன்ற கொண்டுவந்து நிறைவேற்றிக்கொள்வதென்பது கடும் சவாலுக்குரிய பணியாகும்.

குற்றப் பிரேரணையை எதிர்கொண்ட முதலாவது ஜனாதிபதி யார்?

இலங்கையில் 1978 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உருவாக்கப்பட்டது. 88 வரை அப்பதவியில் ஜே.ஆர். ஜயவர்தன நீடித்தார். 

1991 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த ரணசிங்க பிரேமதாசவுக்கு எதிராக அவரது கட்சி உறுப்பினர்களாலேயே நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. அப்போது சபாநாயகராக பதவி வகித்த எம். எச். மொஹமட், கையொப்பமிட்ட எம்.பிக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு பிரேரணையை நிராகரித்தார். இதனால் ரணசிங்க பிரேமதாசவுக்கு ஏற்படவிருந்த ஆபத்து நிலை தவிர்க்கப்பட்டது.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை எம்.பிக்களின் கையொப்பம் இருக்கவில்லை. அதனை காரணம்காட்டி அப்போதைய சபாநாயகர் எம். எச். மொஹமட் , நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிராகரித்தார்.

அதன்பின்னர் டி.பி. விஜேதுங்க, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிகளை வகித்துள்ளனர்.

அவர்களுக்கு எதிராக குற்றப் பிரேரணை வரவில்லை. மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொண்டுவருவதற்கு முனைப்புகள் இடம்பெற்றாலும் அத்திட்டம் செயற்படுத்தப்படவில்லை.

எனவே எதிரணியினரால் ஐனாதிபதி கோட்டபய ராஜபக்‌ச அவர்களுக்கு எதிராகவும் அவர் தலைமையில் உள்ள அரசை இல்லாது செய்துவிட தற்போதைய நாட்டு சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி கொண்டுவர தீர்மானித்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பது நம்பகம் இல்லாமலே போகும் என்பதுவே நிதர்சனமான உண்மை.   

மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், Scarborough, Canada

25 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Siegen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Zürich, Switzerland

20 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், பிரித்தானியா, United Kingdom

27 Sep, 2010
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Scarborough, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Gunzenhausen, Germany

24 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Noisiel, France

23 Sep, 2025
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

Chavakacheri, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

தாவடி, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

24 Sep, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருகோணமலை, London, United Kingdom

21 Sep, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, திருகோணமலை

26 Sep, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Narantanai, யாழ்ப்பாணம், மெல்போன், Australia

25 Sep, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Frankfurt, Germany, Toronto, Canada

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

19 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2015
மரண அறிவித்தல்

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, கட்டுவன், மீசாலை, Toronto, Canada

22 Sep, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், யாழ். அத்தியடி, உரும்பிராய், திருகோணமலை, Milton, Canada

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US