ராஜபக்சர்களை நெருங்கும் ஆபத்து! செவ்வந்தியுடன் சிக்கப்போகும் 2029 இன் ஜனாதிபதி..
தற்போது இலங்கையின் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது, நாளுக்கு நாள் பல முன்னாள் அரசியல் முக்கியஸ்தர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில்,முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் ரகித ராஜபக்ச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோர், ஹரகட்டா' எனப்படும் பாதாள உலக நபரை விடுவிக்க இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையில், வெளிநாட்டில் பதுங்கியுள்ள பசில் ராஜபக்சவைச் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
இஷாரா செவ்வந்தி தொடர்பான விவகாரமத்தில் நாமல் ராஜபக்ச தொடர்புபட்டுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த கைதுகளை 'அரசியல் பழிவாங்கல்' என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..