ஜப்பான் முன்னாள் பிரதமரின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்திய ஜனாதிபதி
அண்மையில் மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (27) டோக்கியோவிலுள்ள நிப்பொன் புடோக்கனில் (Nippon Budokan) அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மலர் கொத்து ஒன்றை வைத்து ஷின்சோ அபேவின் உடலுக்கு இறுதி அஞ்சலியை செலுத்தினார் என ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் அவரது பணிக்குழுவின் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹரிஸ் உள்ளிட்ட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பானில் சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார். முக்கியமாக ஜப்பான் வெளியவிவகார அமைச்சர் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
May you like this Video
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam