ஜனாதிபதி ரணில், சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூ உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதி கிரியை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சீன் ஷோ அபேவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி நேற்று (26.09.2022) ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த சிங்கப்பூர் பிரதமருடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி குறித்து பேச்சுவாரத்தை
மேலும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாஷா ஹயாஷியுடனும் ரணில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ள நிலையில் ஜனாதிபதி உலகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மீண்டும் பதின்மூன்றா....! 1 நாள் முன்

பிரான்ஸ் உணவகங்களில் பீட்சா தயாரித்துவந்த நபர் கைது: தெரியவந்துள்ள அதிரவைக்கும் பின்னணி News Lankasri

எல்லையில் குவிக்கப்படும் 5,00,000 ரஷ்ய வீரர்கள்: தாக்குதல் பகுதிகள் இதுவாக இருக்கும் என அமைச்சர் தகவல் News Lankasri
