ஜனாதிபதி ரணில் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் நீதியரசர் தலைமையிலான 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் இன்று இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தண்டனை விலக்கல் சலுகை
இலங்கையின் ஜனாதிபதி ஒருவருக்கு உள்ள தண்டனை விலக்கல் சலுகை அடிப்படையிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி
எனினும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தனி ஆள் மனு ஒன்றின் அடிப்படையிலேயே
அவர் இந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ளார்.





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
