ஜனாதிபதி மாளிகை உட்பட முக்கிய இடங்கள் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனம்
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை மற்றும் பிரதமரின் செயலகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரதேசம் விசேட அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
வர்த்தமானியில் கையெழுத்திட்ட ஜனாதிபதி
இது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு கையெழுத்திட்டுள்ளார்.
இலங்கையின் யுத்தம் நடைபற்ற காலத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக நாட்டின் பல இடங்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. அது பொதுவான அனுபவமாக இருந்தது. போர் முடிவுக்கு வந்த பின்னர் அனைத்து பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடந்த போராட்டங்களின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலகம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு நுழைந்து அங்கு தங்கியிருந்தனர்.
அத்துடன் அவற்றுக்கு சேதம் ஏற்படுத்தியதுடன் பொருட்களையும் கொள்ளையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

தோழியை கொலை செய்தது ஏன்? ஜேர்மன் சிறுமியை சக மாணவிகள் கொலைசெய்த விவகாரத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் News Lankasri

100 ஆண்டுகளில் இல்லாத மாற்றம் வரப்போகிறது... நாம் முன்வரிசையில்: விளாடிமிர் புடினுக்கு உறுதி அளித்த சீன ஜனாதிபதி News Lankasri
