ஜனாதிபதியால் புதிய அமைச்சரவையொன்று நியமிப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரசியல் அமைச்சரவையொன்றை நியமித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவை குழு கடந்த திங்கட்கிழமை இரவு கூடியதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் இடம்பெறாத ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் திட்டங்கள்
தேர்தல் திட்டங்களை நிர்வகிப்பதற்காக அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, டிரான் அலஸ், ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் லான்சா, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோரைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழு எதிர்காலத்தில் வாரத்திற்கு ஒருமுறை கூடும் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 38 நிமிடங்கள் முன்

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
