சாந்தனின் இறுதி ஆசையை நிறைவேற்றிய சகோதரி: அனைவரிடமும் உருக்கமான கோரிக்கை
புதிய இணைப்பு
இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் பூதவுடல் பெருந்திரளானோரின் கண்ணீருக்கு மத்தியில் அவரது வீட்டில் கையளிக்கப்பட்டுள்ளது.
அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக சகோதரி ஆரத்தி எடுத்து வரவேற்றுள்ளார்.
சாந்தனின் புகழுடல் தாங்கிய ஊர்தி யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு செல்லப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
அத்துடன் உயிரிழந்த சாந்தனின் புகழுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
மேலும் இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.







மேலதிக தகவல் - தீபன்
முதலாம் இணைப்பு
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்) புகழுடல் ஊர்தி தற்போது யாழ்ப்பாணம் வடமராட்சியை வந்தடைந்துள்ளது.
வவுனியாவில் இன்று காலை 8 மணியளவில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட சாந்தனின் புகழுடல் ஊர்தி ஏ9 வீதி ஊடாக மாங்குளம் - கிளிநொச்சி ஆகிய இடங்களில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு யாழ்ப்பாணத்திற்கு எடுத்துவரப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் கொடிகாமம் நெல்லியடி ஊடாக அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டிக்கு எடுத்துவரப்பட்டு வல்வெட்டித்துறை தீருவிலில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.
அனைவரையும் திரண்டுவர அழைப்பு
மாலை அவரது வீட்டிற்கு எடுத்துச்செல்லப்படும் புகழுடல் நாளை திங்கட்கிழமை (04) எள்ளங்குளம் மயானத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது.
இறுதி நினைவஞ்சலி நடாத்தப்படவுள்ள வல்வெட்டித்துறை தீருவிலில் அனைவரையும் திரண்டுவர அழைப்பு விடுத்துள்ள பொது அமைப்புக்கள் இறுதிக்கிரியைகள் நடைபெறும்.
மேலும் திங்கட்கிழமை குடும்பத்தவர்கள் மற்றும் ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தவும் ஒத்துழைக்க கோரிக்கை விடுத்துள்ளன.
மேலதிக தகவல் - பிரதீபன்











அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri