ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் வெளியான தகவல்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் தற்போது நிலவும் விமானங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து குத்தகை அடிப்படையில் விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பெல்ஜியம் விமான சேவை
அந்தவகையில் இலங்கையில் உள்ள தனியார் விமான சேவையான Fitz Air இடமிருந்து Airbus A.320 ரக விமானமொன்றை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் தற்காலிகமாக குத்தகைக்கு எடுக்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த மாதம் பெல்ஜியம் விமான சேவையிலிருந்து Airbus A. 330-200 ரக இரண்டு விமானங்கள் குத்தகை அடிப்படையில் பெறப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விமானங்களில் 22 வணிக வகுப்பு இருக்கைகளும் 240 பொருளாதார வகுப்பு இருக்கைகளும் உள்ளன.
மேலும், இவை பெல்ஜிய ஏயார்லைன் விமானிகளால் இயக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |