ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலையான நபர் சிஐடியினருக்கு கொடுத்த அதிர்ச்சி
வெசாக் தினத்தன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட அதுல திலகரத்ன பிறிதொரு வழக்குக்காக மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஜனாதிபதியின் பொதுமன்னிப்பினைப் பெற்றதாக தெரிவித்து குற்றப்புலனாய்வுத் துறையினரால் தேடப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
இவர் அநுராதபரம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக, அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளார்.
தனக்கு எதிராக நிலுவையில் உள்ள மற்றுமொரு வழக்கு தொடர்பாக நேற்று அவர் அநுராதபுரம் மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு விசாரணையின் போது அவரது சட்டத்தரணியுடன் அதுல திலகரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், தாம் நீதிமன்றில் பிரசன்னமாகியுள்ளதை கையை உயர்த்தி அதுல திலகரட்னவும் உறுதிப்படுத்தியதாக அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, அதுல திலகரத்னவை கைது செய்ய, அவரை தேடி வந்ததாகக் கூறப்படும் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் குழுவினரும் நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணை முடிந்ததும், அதுல திலகரத்ன நீதிமன்ற வளாகத்திற்குள் தனது நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, அவர் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளைக் கடந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார் என்றும் அநுராதபுரம் சிறைச்சாலை கண்காணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.





தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
