ஈழத்து வேடனின் பாடல் பல்கலைக்கழக பாடத்தில் இணைப்பு
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பிரபல பாடகரான வேடன் எனப்படும் ஹிரந்தாஸ் முரளியின் பாடலொன்று, கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் பாடத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகவும் இந்தியாவின் கேரளாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேடன், மலையாள திரையுலகில் சமீப காலமாக மிகவும் பிரபலமான பாடகராக உள்ளார்.
இவரின் பாடல்கள், சாதி மற்றும் நிற ஒடுக்குமுறைக்கு எதிரானதாக உள்ளன.
ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில், வேடனின் பாடல்களில் ஒன்றான 'பூமி ஞ்யான் வாழுன்ன இடம்’ – Bhoomi Njan Vazhunidam' எனும் பாடல், கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் மலையாள பட்டப்படிப்பின் ஒப்பீட்டு இலக்கியத் தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடத்திட்டத்தில், பிரபல பொப் பாடகர் மறைந்த மைக்கல் ஜெக்சனின் 'They Don’t Care About Us' எனும் பாடலுடன் வேடனின் பாடல் ஒப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு பாடல்களிலும் உள்ள வரிகள், பாடிய விதம், ஆடல்கள் தொடர்பில் மாணவர்களின் பாடத்திட்டம் அமையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
