உண்மைகளை தேடி செம்மணிக்கு சென்ற எமக்கு கிடைத்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!
நீண்டகாலமாக இலங்கை இராணுவத்தின் தண்டனை விலக்கின் சின்னமாக கருதப்பட்ட செம்மணி சிந்துபாத்தி புதைகுழியின் மர்மங்கள் தற்போது வெளியாகியுள்ளமை சர்வதேசத்தின் பார்வையை இலங்கை மீது திருப்பியுள்ளது.
1998 ஆம் ஆண்டில், ஒரு இலங்கை இராணுவ வீரர் அந்தப் பகுதியில் வெகுஜன புதைகுழிகள் இருப்பதாக சாட்சியமளித்த கருத்து இன்று உண்மைகளாக எலும்புக்கூடுகள் வடிவில் வெளிவருகின்றது. இதுவரையில் 19 மனித என்புக்கூடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளின் எச்சங்கள், மனித புதைகுழிகள் மற்றும் படுகொலைகள் தொடர்பான போருக்கு முந்தைய இலங்கை அரசின் மோசமான பதிவை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன என்றே கூற வேண்டும்.
இந்தநிலையில் செம்மணி மனிதப்புதைக்குழி தொடர்பில் உண்மைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில் பொறுப்பு வாய்ந்த ஊடகமாக லங்காசிறி செம்மணி புதைக்குழியை நோக்கி புறப்பட்டது.
உண்மைகளை தேடி செம்மணிக்கு சென்ற எமக்கு பல அதிர்ச்சியூட்டு விடயங்கள் கிடைக்கப்பெற்றன.
செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை முதலில் கண்ட நபர் நேரடி சாட்சியாக எம்முடன் அவரது அனுபவங்களை எம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.
செம்மணியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட மனித உடலங்கள் ஆடைகளை களைந்து கைகளை கட்டி சித்திரவதை செய்து கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை ஊடகங்களில் வெளிவராத பல உண்மை விடயங்களை அம்பலப்படுத்துகின்றது கீழுள்ள காணொளி...
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri