இலங்கைக்கு வருகை தரவுள்ள தமிழ்நாட்டின் தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள்
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்கள் அடங்கிய குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்.
சுமார் 20 பேர் கொண்ட இந்தக் குழு, எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் 24 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம்
வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன், தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களுடன் கடந்த மாதம் 29 ஆம் திகதி கலந்துரையாடினார்.

கோயம்புத்தூரில் உள்ள மில்லட் ஃபவுண்டேஷன் மற்றும் பிஸ்நெட் சொல்யூஷன் நிறுவனங்களின் நிர்வாகக் குழுவினரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜே.சி.ஐ. நிர்வாக உறுப்பினர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இந்த விஜயத்தின் போது வர்த்தகம், முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளில் உள்ள வாய்ப்புகள் குறித்து ஆராயப்படவுள்ளன.
மேலும், சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்தல், உற்பத்தி மற்றும் தொழில்முனைவு துறைகளிலும் புதிய வாய்ப்புகளை கண்டறிவதே இந்த பயணத்தின் நோக்கமாகும்.