சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு விவகாரம்! நீதிமன்றில் முன்னிலையான அதுல
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெற்ற பின்னர் சர்ச்சைக்குரிய வகையில் அனுராதபுரம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அதுல திலகரத்ன, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலுவையில் உள்ள மற்றொரு வழக்கு தொடர்பில் அவரை நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், அவரைக் கைது செய்ய பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறைத்தண்டனை
நிதிமோசடி குற்றச்சாட்டின் பேரில் அனுராதபுரம் உயர் நீதிமன்றம் அதுல திலகரத்னவுக்கு சிறைத்தண்டனை விதித்திருந்தது.
மேலும், குறித்த வழக்கு தொடர்பில் பணிநீக்கம் காரணமாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, சிறைச்சாலை அதிகாரிகளால் இன்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை(அதுல திலகரத்ன) சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் அவர் அழைத்துவரப்பட்டுள்ளார்.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
