ஜனாஸாக்களை கையளிப்பது குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை
ஜனாஸாக்களை தாமதமின்றி கையளிக்கும் வகையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பிரதேசங்களுக்கு மேலதிக திடீர் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்குமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் (Pramitha Bandara) ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
கடிதத்தில் மேலும்,
"முஸ்லிம் மக்களின் (ஜனாஸாக்களை) இறுதி கிரியை சடங்குகள் ஏனைய மத சடங்குகளை போலன்றி 24 மணித்தியாலங்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும்.
மரபு ரீதியான கடமைகள்
எனினும், பல்வேறு காரணங்களினால் இதனை உரிய காலத்திற்குள் நிறைவேற்றுவதில் பல சிக்கல்களை இம்மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இது நல்லாட்சியின் நெறிமுறை பொறுப்புகளுக்கும் முரணானதாகும்.
எனவே, முஸ்லிம் மக்களுக்கு அவர்களின் மரபு ரீதியான கடமைகளை எளிதாக்கும் வகையில் முஸ்லிம் மக்கள் அதிகம் வாழும் பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முஸ்லிம் சமூகத்திலிருந்து கூடுதல் மரண விசாரணை அதிகாரிகளை நியமிக்க வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 22 மணி நேரம் முன்

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
