வலி.தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான அமர்வு இன்று(19) பிற்பகல் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்றது.
தமிழ் அரசுக் கட்சி
இதன்போது தவிசாளரை தெரிவு செய்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனும் முன்மொழியப்பட்டார்.
பகிரங்க வாக்களிப்பில் நடைபெற்ற தவிசாளர் தெரிவில், இலங்கைத் தமிழரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாசுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த கருணைநாதன் அபாராசுதனுக்கு ஆதரவாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை சேர்ந்த 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த 6 உறுப்பினர்கள் என மொத்தமாக 12 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
பிரதித் தவிசாளர்
தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த 5 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது நடுநிலையாக செயற்பட்டனர். இதன் அடிப்படையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த திராகராசா பிரகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அடுத்து இடம்பெற்ற பிரதித் தவிசாளர் தெரிவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியை சேர்ந்த செல்வரத்தினம் உதயகுமாரன் 14 வாக்குகளைப் பெற்று வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.




















ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 2 மணி நேரம் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
