உறுப்பினர் ஒருவரை அதிரடியாக இடைநிறுத்திய இலங்கைத் தமிழரசுக் கட்சி
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு பிரதேச சபையின், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் பொன்னம்பலம் இராஜேந்திரம், உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை மீறிச் செயற்பட்டதன் காரணமாக அவர் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநிறுத்தப்படுவதாக, இலங்கைத் தமிழரசுக் கட்சி கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
விளக்கம் ஏதும் இருப்பின்
இந்த நடவடிக்கை சம்மந்தமான விளக்கம் ஏதும் இருப்பின் ஒரு வார காலத்திற்குள் எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும்.
இல்லையெனில் கொடுப்பதற்கு விளக்கம் எதுவும் இல்லை என்ற அடிப்படையிலும் அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கமாக இல்லாவிட்டாலும் கட்சியில் இருந்தும் பிரதேச சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் உடனடியாக நீக்கப்படுவீரகள் கட்சியின் பொது செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
