பிரஜா சக்தி திட்டம்.. தமிழ்த்தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது - சி. அ. யோதிலிங்கம்.
தேசிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட பிரஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய இயக்குனருமான சி. அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர், "தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியாளர்கள் அடிமட்ட மக்கள் மத்தியில் பணியாற்றுவதற்காக பிரஜா சக்தி என்கின்ற அமைப்பை உருவாக்கியுள்ளது.
திருகோணமலை வைத்தியசாலையில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் பிக்குகள் : சர்ச்சையை கிளப்பும் சிவில் அமைப்புகள்
தலைவர்கள் தெரிவு
அந்த அமைப்பின் ஊடாக வறுமை ஒழிப்புத் திட்டத்தை தாம் மேற்கொள்வதாக கூறி வருகிறார்கள். தங்களினுடைய உள்ளூராட்சி அதிகாரங்கள் இல்லாத இடங்களில் அதனை பலவீனப்படுத்துவதற்கா அந்த அதிகாரத்திற்கு சமாந்தரமாக உருவாக்கப்பட்ட அமைப்புத்தான் இந்த பிரஜா சக்தி அமைப்பு.

இது தமிழ் பகுதிகளில் உள்ளூராட்சிமன்றங்களை பலவீனப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று என்றுதான் கூறவேண்டும். கிராமங்களில் அவர்கள் பிரஜா சக்தி தலைவர்களை தெரிவு செய்கின்றார்கள்.
தேசிய மக்கள் சக்தி தங்களோடு நம்பிக்கையாக நிற்பவர்களைத் தான் தெரிவு செய்கின்றார்களே தவிர மக்கள் தெரிவு செய்த தலைவராக அந்த தலைவர் இருக்கவில்லை.
இங்கு ஜனாதிபதி வருகின்ற போது கிளைகள் எல்லாவற்றிற்கும் மக்களை அழைத்து வருமாறு கட்டளையிடப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
கிராம சேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகாத்தர்கள், பிரஜா சக்தி கட்டமைப்புக்களுக்கும் ஆட்களை அழைத்து வர கட்டளை இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam