கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரிப்பு
2026 ஜனவரியில் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதத்திற்கான கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் கொழும்பு நகர்ப்புற சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் ஆகியவற்றைத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த சமூகத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 2026 ஜனவரி மாதத்தில் 2.3% ஆக அதிகரித்துள்ளது.
பணவீக்கம் அதிகரிப்பு
இது 2025 டிசம்பர் மாதத்தில் 2.1% ஆகப் பதிவாகியிருந்தது. 2026 ஜனவரி மாதத்தில் உணவுப் பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 3.3% ஆக அதிகரித்துள்ளதுடன், 2025 டிசம்பர் மாதத்தில் இது 3.0% ஆகக் காணப்பட்டது.

அதேவேளை, உணவு அல்லாத பிரிவின் வருடாந்த பணவீக்கம் (புள்ளிக்கு புள்ளி) 2025 டிசம்பர் மாதத்தில் 1.8% ஆகக் காணப்பட்டதுடன், 2026 ஜனவரி மாதத்திலும் அந்தப் பெறுமதி 1.8% ஆக மாற்றமின்றி நிலவுவதாகத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam