தேசிய தலைவரின் இறுதி நிமிடத்தை தீர்மானித்த மூவர்! காணொளியில் சிக்கிய ஆதாரம்...
இலங்கையில் அதுவும் தமிழர்பகுதிகளில் தற்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறிய விடயமே பேசுபொருளாக மாறியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவரை கொலை செய்வது தொடர்பான ஆலோசனையை மகிந்த அரசாங்கத்திற்கு, இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் சிவசங்கர் மேனன் வழங்கியதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கு முன் தமிழரசுகட்சியின் முன்னாள் தலைவர் சம்பந்தன் மற்றும் இலங்கையின் தமிழ் தலைவர்கள், கருணாநிதி, ஜெயலலிதா, சர்வதேச, உள்ளூர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்தி பேசினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சம்பந்தன் இதில் தொடர்புபட்டுள்ளாரா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் உயிரிழந்துள்ள நிலையில், சிவசங்கர் மேனன் மட்டுமே உயிருடன் உள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி.....



