லசந்தவை தேடிப் புறப்பட்ட ரிப்போலி பிளட்டூன்! பரபரப்பான இறுதி நிமிடங்கள்
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
அந்தவகையில், சாதாரண வர்த்தகராக இருந்த உதயங்க வீரதுங்க என்ற நபர் மகிந்த ராஜபக்ச 2006ஆம் ஆண்டு பதவியேற்றதும் திடீரென்று ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டார்.
9 வருடங்களின் பின் 2015ஆம் ஆண்டு வீரதுங்கவின் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை மைத்திரி அரசாங்கம் மீளப்பெற்றது.
உக்ரைன் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த சட்டவிரோத குழுக்களுக்கு ஆயுதங்களை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவரது இராஜதந்திர அந்தஸ்தை இலங்கை அரசாங்கம் நீக்கியது.
இந்நிலையில் பல நாடுகளில் தலைமறைவாயிருந்த வீரதுங்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்ரபோலுக்கு அழைப்பாணையை விண்ணப்பித்திருந்த நிலையில் 2018ஆம் டுபாயில் வைத்து வீரதுங்க கைது செய்யப்பட்டார்.
வீரதுங்க 2006ஆம் ஆண்டு உயர்ஸ்தானிகராக இருந்த காலப்பகுதியில் மேற்கொண்ட முக்கியமான ஒரு ஊழல் குற்றச்சாட்டின் பேரில்தான் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டுத்தான் லசந்த விக்ரமதுங்க என்ற ஊடகவியலாளர் படுகொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஐபிசி தமிழின் உண்மைகள் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
