எல்ல விபத்து! மீட்பு பணி செய்த இராணுவ வீரருக்கு நேர்ந்த கதி
எல்ல வெல்லவாய பள்ளத்தாக்கில் விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்தவர்களை மீட்கச் சென்ற இராணுவ அதிகாரி காயமடைந்துள்ளார்.
இலங்கை இராணுவத்தின் இரண்டாவது சிறப்புப் படையை சேர்ந்த அதிகாரியே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
எல்ல பகுதியைச் சேர்ந்த அவர் விடுமுறை காரணமாக வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
1000 அடிக்கும் அதிகமான பாறையில் கவிழ்ந்திருந்த பேருந்தில் இருந்தவர்களை மீட்பதற்காக பிரதேச மக்களுடன் சேர்ந்து குறித்த இராணுவ அதிகாரியும் கீழே சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த சரிந்து விழுந்த கல்லொன்று அவரது முகத்தில் விழுந்துள்ளது.

இந்நிலையில், காயமடைந்த அவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam