எல்ல - வெல்லவாய கோர விபத்து! இறுதியாக எடுத்த புகைப்படங்கள்..
எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளன.
தங்காலை நகரசபை ஊழியர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகள்
குறித்த பேருந்தில் 30 மேற்பட்டோர் இருந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, போதிய வெளிச்சம் இன்மையால் மீட்பு பணிகள் தாமதமடைந்ததாகவும் வீதியில் வாகன நெரிசல்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சம்பவ இடத்தில் இராணுவத்தினரால் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







