நிறைவேற்ற அதிகாரம் என்பது பிரச்சினை இல்லை அது நல்லவர்களிடமிருந்தால் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம்: கோவிந்தன் கருணாகரம்

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis
By Navoj Jun 22, 2022 09:51 PM GMT
Report

நிறைவேற்ற அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை எனவும் அது நல்லவர்களிடமிருந்தால் சில வேளைகளில் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம். ஆனால், கோட்டபாய போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான அதிகாரம் இருப்பதனாலேயே நாங்கள் இன்று அதனை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

எமது மக்கள் பற்றி ஆழமாகச் சிந்திக்காது 21வது திருத்தத்தை ஆதரிக்கவும் முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் பொருளாதார நிலை 

நிறைவேற்ற அதிகாரம் என்பது பிரச்சினை இல்லை அது நல்லவர்களிடமிருந்தால் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம்: கோவிந்தன் கருணாகரம் | Power To Execute Sri Lanka President

நாட்டின் பொருளாதார நிலை மிக மோசமாக இருக்கின்றது. மட்டக்களப்பு மாவட்ட நிலைமை சம்பந்தமாகவும் பேசவேண்டியுள்ளது.

உண்மையில் உணவுப் பொருட்களுக்கு மாத்திரமல்ல உணவை உற்பத்தி செய்யும் மூல காரணங்களான எரிபொருளுக்கும் மிகவும் தட்டுப்பாடான நிலையில் இருக்கிறது. ஒட்டு மொத்த நாட்டிலும் தட்டுப்பாடு நிலவினாலும் விவசாயத்தை மீன்பிடியை நம்பியிருக்கும் மட்டக்களப்பு மாவட்டம் மிகவும் கஸ்டமான நிலையில் இருக்கின்றது.

இந்தப் போகத்தின் அறுவடை நடைபெறவிருக்கிறது. கடற்தொழிலாளர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல முடியாத நிலை இருக்கிறது. எரிவாயுப்பிரச்சினையால் மண்ணெண்ணெய் தட்டுப்பாடான நிலையில் ஒவ்வொருவருடைய வீட்டிலும் அடுப்பு எரிவதற்கு கூட சிரமமாக இருக்கின்றது.

இந்த வகையில் நீண்ட வரிசைகளைத்தான் ஒவ்வொரு எரிபொருள் நிலையங்களிலும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

இந்த நாட்டின் நிலைமையைப் பொறுத்தமட்டில் தற்போதைய ஜனாதிபதி நாட்டின் பொருளாதார நிலைக்கு முழுமுதல் காரணமானவர் அவர் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றவுடன் தேர்தல் வாக்குறுதிக்காக வருமான வரியை மிகவும் கூடுதலாகக் குறைத்தார்.

8 சதவீதத்துக்குக் கொண்டுவந்தார். விவசாய நாடான இலங்கையின் இரசாயன உர இறக்குமதியை நிறுத்தினார். 2 வருடங்களுக்குள் இந்த நாடு எப்படியிருக்கும் என்பதனை சிந்திக்காத மடத்தனமானதொரு ஜனாதிபதியாக சர்வதேச நாயண நிதியத்தை நாடாதிருந்தார்.

அந்த வகையில் இந்த நாடு இப்படியானதொரு பொருளாதார நெருக்கடிக்குள் இன்று சிக்கியிருக்கிறது.

தொடரும் போராட்டம் 

நிறைவேற்ற அதிகாரம் என்பது பிரச்சினை இல்லை அது நல்லவர்களிடமிருந்தால் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம்: கோவிந்தன் கருணாகரம் | Power To Execute Sri Lanka President

கோட்டா கோ ஹோம் என்று நாடு முழுவதிலுமே போராட்டங்கள் வெடித்தது பிரதமராக இருந்த மகிந்த பதவி விலகும் அளவிற்கு போராட்டம் உக்கிரமடைந்தது.

அவர் விலகியவுடன் இந்த நாட்டை மீட்டெடுப்பேன் என்று ரணில் விக்ரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும் போராட்டக்காரர்கள் உரத்த குரலில் கோட்டபாய ராஜபக்ச அவர்களை காப்பாற்றுவதற்காகத்தான் பிரதமர் பதவியை ஏற்றதாகக் கூறினார்கள்.

கிட்டத்தட்ட அது உண்மைபோலவே தற்போது இருக்கின்றது. ஏனென்றால் கிட்டத்தட்ட அவர் பதவியேற்று 2 மாதங்களாகிவிட்ட போதும் நாட்டில் எந்தவிதமான மாற்றமுமில்லை. பொருளாதார நெருக்கடி கூடிக்கெண்டே செல்கின்றது. சில வேளைகளில் அனைத்துக் கட்சிகளின் கூட்டு அரசாங்கம் ஏற்பட்டிருந்தால் சர்வதேச நாடுகள் நம்பிக்கையுடன் உதவி செய்திருப்பார்கள்.

தேசியப்பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்கு வந்த ஒருவர் பிரதமராகப் பதவியேற்ற காரணத்தினால் சஜித் பிரேமதாச அவர்களது அணி அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஜே.வி.பி. ஆதரவு கொடுக்கவில்லை.

இதர கட்சிகளும், ஏன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கூடுதலான உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு கொடுக்காத நிலையில், இன்று சர்வதேசத்தின் ஒரு நம்பிக்கையான பிரதமராக அவர் இருப்பார் என்று நினைத்துக் கெண்டிருந்தாலும் கூட சர்வதேசம் அவரை நம்பி இந்த நாட்டுக்கு உதவி செய்ததாகத் தெரியவில்லை.

நாட்டின் பொளாதாரம் வர வர மிக மோசமடைந்து கொண்டு செல்வது மாத்திரமல்ல. அவரது உரைகள் கூட இரண்டு மாதத்துக்குத்தான் உணவு இருக்கிறது. இந்திய உதவித்திட்டத்தின் கீழ் இன்றுதான் இறுதி எண்ணைக்கப்பல் வருகின்றது என்கின்ற அறிவுறுத்தல்களினால் மக்கள் மேலதிகமாக எரிபொருளை உணவுகளைச் சேகரிப்பதனால் பெரும் நெருக்கடியை இந்த நாடு சந்தித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல.

எதிர்காலத்திலும் இதைவிட அதிகமான நெருக்கடியைச் சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் ஒரு விலைக்கட்டுப்பாடு இல்லாதமையினால் நாட்டிலுள்ள பெரு முதலாளிகள் தொடக்கம் சிறு வியாபாரிகள் வரை பொருட்களின் விலைகளை அவரவர் நினைத்தபடி நிர்ணயிக்கின்றமையால் மக்களின் கஸ்டம் மேலும் மேலும் பெருகிக் கொண்டே வருகின்றது.

கோட்டபாய ராஜபக்சவை நம்பி சர்வதேசம் ஒருபோதும் உதவி செய்வதாக இல்லை. நாட்டின் அரசாங்கத்தில் ஒரு மாற்றம் ஏற்படாதவரை இந்த நாட்டின் பொருளாதாரம் தற்போதிருக்கின்ற நிலைமையை விட மோசமாக செல்லும் என்பதுதான் தற்போது வெளிப்படையாக இருக்கின்றது.

21வது திருத்தச் சட்டம்

நிறைவேற்ற அதிகாரம் என்பது பிரச்சினை இல்லை அது நல்லவர்களிடமிருந்தால் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம்: கோவிந்தன் கருணாகரம் | Power To Execute Sri Lanka President

தற்போது அரசியமைப்பின் 21வது திருத்தச் சட்டம் தொடர்பில் கதைகள் இருக்கின்றன. இந்த 21வது அரசியலமைப்புத் திருத்தத்தினால் எமது மக்களுக்கு வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு என்ன நன்மை இருக்கின்றது என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு எட்டு திருத்தங்களுக்கு முன்பு வந்த 13வது திருத்தச் சட்டத்தின் ஊடாகக்கொண்டு வரப்பட்ட சட்ட மூலங்கள் கூட இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றது.

13வது திருத்தச் சட்டத்தில் இருக்கின்ற காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இன்றும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அதனூடாக இந்த அரசு அரசியலமைப்பை மீறுகின்றதாகவே கருதப்படுகின்றது.

21வது திருத்தச் சட்டத்தை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஒரு சாராருக்கு இருக்கின்றது. இந்த 21வது திருத்தச் சட்ட வரைபிலும் அவர்கள் மிக முக்கிய பங்காற்றியிருப்பதாகக் கூடக் கூறியிருக்கின்றார்கள்.

ஆனால் இந்த 21வது திருத்தச் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களைக் கொடுத்து நாடாளுமன்ற ஜனநாயக முறையைக் கொண்டு வர வேண்டும் என்று கூறப்படுகின்றது. இவ்வாறான நாடாளுமன்ற ஜனநாயக முறை இருக்கும் போதுதான் பண்டா செல்வா, டட்லி செல்வா ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. கைச்சாத்திடப்பட்ட அந்த ஒப்பந்தங்கள் இந்த நாடாளுமன்ற ஜனநாயக முறைமையிலே கிழித்தெறியப்பட்ட வரலாறுகளே இருக்கின்றது. நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறை 1977ம் ஆண்டுக்குப் பின்னர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்களினாலேயே முதல் முறையாகக் கொண்டு வரப்பட்டது.

இதற்கு முன்னர் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இலங்கையில் கொழுந்து விட்டெரிந்த ஸ்ரீ பிரச்சினை இரவோடு இரவாக நாடாளுமன்றத்திற்கு சட்டமூலம் கொண்டு வரப்படாமல் நிறைவேற்று அதிகார முறையினால் இல்லாமலாக்கப்பட்ட வரலாறும் உண்டு.

நிறைவேற்ற அதிகாரம்

எனவே நிறைவேற்ற அதிகாரம் என்பது இங்கு பிரச்சினை இல்லை. அது நல்வர்களின் கைகளில் இருந்தால் சில வேளைகளில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் எமது மக்களுக்கு நன்மையாகவும் இருக்கலாம். ஆனால், கோட்டபாய ராஜபக்ச போன்ற மடத்தனமாகச் சிந்திக்கக் கூடியவர்களின் கைகளிலே இவ்வாறான நிறைவேற்று அதிகாரம் இருக்கின்ற காரணத்தினாலே தான் நாங்கள் இன்று அந்த அதிகார முறைமையை இல்லாமல் செய்ய வேண்டும் என்று விரும்புகின்றோம்.

இந்த நிலைப்பாட்டினால் எமது மக்களுக்கு என்ன பயன் என்பதையும் மிக முக்கியமாகச் சிந்திக்க வேண்டும்.

21வது திருத்தச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பரப்பிலே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்றால் 13வது திருத்தச் சட்டத்திற்குள் இருக்கும் அதிகாரங்களை முழுமையாகப் பரவலாக்க வேண்டும் என்ற திருத்தம் 21வது திருத்தச் சட்டத்திற்குள்ளே உள்வாங்கப் பட வேண்டும்.

அதற்கும் மேலாக நிதி அதிகாரங்கள் மாகாணசபைகளுக்குப் பகிரப்பட வேண்டும். என்கின்ற சரத்துக்கள் கூட 21வது திருத்தச் சட்டத்திற்குள் வரவேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்கள்

இன்று அரசாங்கமும், அரசாங்கத்திற்குள் இருப்பவர்களும் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களை இங்கு முதலிடுமாறு கோரிக்கை விடுக்கின்றார்கள். அவர்கள் முதலீட்டுக்கா கொண்டு வரும் பணத்திற்கு இங்கு உத்தரவாதம் இருக்க வேண்டும்.

அந்த அடிப்படையில் இங்கு மாகாணங்களுக்கு நிதி அதிகாரங்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குறிப்பிட்ட மாகாணசபைகளினூடாக அந்த அந்த மாகாணங்களிலே முதலீடுகளைச் செய்வார்கள். புலம்பெயர் தேசங்களிலே தமிழர்கள் மாத்திரமல்ல சிங்களவர்கள் கூட தனவந்தர்களாக இருக்கின்றார்கள்.

அவர்களும் அவர்களது மாகாண அரசுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து அந்த அந்த மாகாணங்களுக்குரிய நிதியைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து முதலிடுவார்கள். அவ்வாறாக மாகாணசபைகளுக்குரிய நிதி அதிகாரங்கள் கூட 21வது திருத்தச் சட்டத்தலே கொண்டு வரப்பட வேண்டும்.

புலம்பெயர் உறவுகள் தங்கள் நிதிகளை அவர்கள் விரும்பியவாறு பாதுகாப்பாக முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நாட்டிற்கு தேவையான அளவிற்கு ஏன் தேவைக்கு மேலதிகமாகவும் டொலர்களைக் கொண்டு வருவதற்குரிய சாத்தியம் ஏற்படும்.

எனவே 21வது திருத்தச் சட்டத்தை ஆதரிப்பதாக நாங்கள் இருந்தால் இவ்வாறான விடயங்கள் அதில் உள்வாங்கப் படவேண்டும் என்பது தன்னுடைய உறுதியான நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US