மின்வெட்டு தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் மின்வெட்டு தொடர்பில் சற்றுமுன் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி இன்று முதல் இலங்கை முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்றைய தினம் (16.02.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கட்டண உயர்வு
மேலும் தெரிவிக்கையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) அங்கீகரிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வைத் தொடர்ந்து இந்த விடயம் சாத்தியமாகிறது.
மின்சார சபையின் தற்போதைய செலவுகளை நிர்வகிப்பதற்கு மாத்திரமே இந்த கட்டண உயர்வு முன்மொழியப்பட்டுள்ளது.
இந்த கட்டண உயர்வால் எந்த வகையிலும் அரச நிறுவனத்திற்கு கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்தி...
மின்சாரக் கட்டண உயர்வு குறித்து ஜனாதிபதியின் அறிவுறுத்தல்
மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
