5 இலட்சம் புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்கப் போகும் ஐரோப்பிய நாடு..
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மனநிலை அதிகரித்து வரும் சூழலில், ஸ்பெயின் அரசாங்கம் அங்கு சட்டவிரோதமாக வசிக்கும் சுமார் 5,00,000 புலம்பெயர்ந்தோருக்குச் குடியுரிமை வழங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாகத் தொடரப்பட்ட மக்கள் இயக்கப் போராட்டங்களின் (Grassroots campaigning) வெற்றியாகப் பார்க்கப்படும் இந்த அரசாணை, எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குடியுரிமை
2025 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னதாக ஸ்பெயினுக்கு வந்து, குறைந்தது ஐந்து மாதங்கள் அங்கு வசிப்பதற்கான ஆதாரங்களைக் கொண்டுள்ளவர்கள் எவ்விதக் குற்றப் பின்னணியும் இல்லாத பட்சத்தில் இந்தச் குடியுரிமையைப் பெறத் தகுதியுடையவர்களாகக் கருதப்படுவார்கள்.
மற்ற ஐரோப்பிய நாடுகள் எல்லைகளை மூடிவரும் வேளையில் ஸ்பெயின் மட்டும் புலம்பெயர்ந்தோரை அரவணைக்க முடிவெடுத்திருப்பதற்குப் பின்னால் வலுவான பொருளாதாரக் காரணங்கள் உள்ளன.

ஸ்பெயினின் மக்கள்தொகை வேகமாக வயதாகி வருவதால், எதிர்காலத்தில் ஓய்வூதியம் மற்றும் பொதுச் சேவைகளைப் பராமரிக்க அதிகளவிலான உழைக்கும் வர்க்கத்தினர் தேவைப்படுகின்றனர்.
பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான அரசு ஸ்பெயின் ஒரு மூடிய நாடாக இருந்து ஏழ்மையடைவதைக் காட்டிலும் உலகிற்குத் தன்னைத் திறந்து விட்டுப் பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
நாட்டின் வரி
இந்த நடவடிக்கையின் மூலம் கருப்புப் பணச் சந்தையில் (Underground economy) சுரண்டப்படும் தொழிலாளர்கள் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள் இது நாட்டின் வரி வருவாயையும் அதிகரிக்கும்.
இந்த முடிவை கத்தோலிக்க திருச்சபைகள் மற்றும் ரெகுலரைசேஷன் நவ் (Regularization Now) போன்ற அமைப்புகள் வரவேற்றுள்ளன.

இது வெறுமனே ஒரு காகித அட்டை (Residency card) பெறுவது மட்டுமல்ல தங்களின் அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் கண்ணியமான மனிதர்களாக அங்கீகரிக்கப்படும் ஒரு வரலாற்று நிகழ்வு என்று புலம்பெயர்ந்தோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தினரின் வீடுகளில் பணிபுரிபவர்கள் முதல் விவசாயத் தொழிலாளர்கள் வரை பலரும் இதன் மூலம் சட்டப்பூர்வ பாதுகாப்பு பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 28 நிமிடங்கள் முன்
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam