மின்வெட்டு தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்
இலங்கையில் இன்று (16.02.2023) முதல் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என தகவலொன்று வெளியாகியுள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
நிதி நெருக்கடியை எதிர்கொள்வோருக்கான தீர்வு
இதேவேளை மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் நிதி அமைச்சு எதிர்காலத்தில் தீர்மானிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.
66 வீதத்தால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதேவேளை இன்றைய தினத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணையும் இதுவரையில் பதிவு செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.






மண்டபத்தில் சக்தி செய்த பிரச்சனை, ஜீவானந்தம் கேட்ட கேள்வி, குழப்பத்தில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

10 போர் விமானங்களை புவேர்ட்டோ ரிக்கோவிற்கு அனுப்பும் டிரம்ப் - அதிகரிக்கும் போர் பதற்றம் News Lankasri
