அரசியல் அமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறுவது ஒத்திவைப்பு
அரசியல் அமைப்பின் 21ஆம் திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்வது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
21ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதனால் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த சட்டத் திருத்தத்திற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை.

தெளிவுபடுத்தல்களின் பின்னர் அனுமதி பெற உத்தேசம்
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை உத்தேச 21ஆம் திருத்தச் சட்டம் குறித்து சில கட்சிகளின் தலைவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட உள்ளது.
இந்த தெளிவுபடுத்தல்களின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் 21ஆம் திருத்தச் சட்டத்திற்கு அனுமதி பெற்றுக் கொள்ள உத்தேசித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam