21ஆம் திருத்தச்சட்டத்திற்கு கட்சித்தலைவர்கள் ஆதரவு
அரசியலமைப்பின் இருபத்தியோராம் திருத்தச் சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
21ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் அவதானிப்பு மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது தற்போதைக்கு முன்வைக்கப்பட்டுள்ள திருத்தச் சட்ட நகலை நாடாளுமன்றத்தில் விரைவில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
இன்றைய கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தவிர்க்க முடியாத காரணங்களினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொள்ளாத நிலையில், எதிர்வரும் வௌ்ளிக்கிழமை அவர்கள் கலந்து கொள்ளும் வகையில் இறுதிக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கிடையே 21ம் திருத்தச் சட்டம் தொடர்பான மேலதிக விளக்கங்கள் தேவைப்படுவோர் நீதி அமைச்சரைத் தொடர்பு கொண்டு அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri