லண்டனிலிருந்து புறப்பட்டு நடுவானில் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம்! உயிர் தப்பிய பயணிகள்
லண்டனில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 787-8 விமானம் நேற்று நடுவானில் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
குறித்த விமானம் புறப்பட்ட உடன் அதன் விமானிகளில் ஒருவர் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச் வேலை செய்யவில்லை என்பதை கண்டறிந்து பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
விமானம் அவசரமாக தரையிறக்கம்
இதனையடுத்து உடனடியாக நடுவானில் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதுடன், இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,
சம்பவம் பற்றி பொது சிவில் விமான போக்குவரத்து இயக்ககத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்கக உத்தரவின்படி, அனைத்து போயிங் ரக விமானத்தின் சுவிட்சுகளும் பரிசோதனை செய்யப்பட்டன. எனினும் எந்த பாதிப்புகளும் கண்டறியப்படவில்லை.
260 பேர் கொல்லப்பட்ட விமான விபத்து
எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை அறிந்த பயணிகள் கடந்த ஆண்டு நடந்த ஆமதாபாத் விபத்தினை நினைவுகூர்ந்துள்ளனர்.

லண்டனுக்குச் சென்ற போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், அஹமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நொடிகளில் விபத்துக்குள்ளானது.
இதில் 242 பேர் உட்பட 260 பேர் கொல்லப்பட்டனர். இந்த விபத்திற்கு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்சில் ஏற்பட்ட கோளாறு தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 5 மணி நேரம் முன்
எனது நிறம் வைத்து இப்படியெல்லாம் விமர்சனம் வந்தது, ஆனால்... சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் Cineulagam
சிறைக்கு சென்ற இந்திய கிரிக்கெட் வீரர் - விடுதலையாகும் வரை தரையில் தூங்கிய அரச குடும்ப காதலி News Lankasri