அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வு
2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்களுக்கான செயலமர்வொன்று திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த செயலமர்வானது திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சியின் தலைமையில் நேற்று(03) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு செப்டெம்பர் 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
அஞ்சல் மூல வாக்களிப்பு
இன்றைய தினம் (04) மாவட்ட செயலகம், பொலிஸ் , மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும், நாளை (05) ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும், (06) ஆம் திகதி ஏனைய அரச நிறுவனங்கள் , பொலிஸ், பாதுகாப்பு படையில் கடமையாற்றும் அலுவலர்களுக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது , அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள், கடமைகள் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் மற்றும் அஞ்சல் மூல வாக்கு உதவி தெரிவத்தாட்சி அலுவலர் எஸ்.கே.டி நிரஞ்சன் ஆகியோரால் தெளிவூட்டப்பட்டுள்ளது.
இந்த செயலமர்வில் மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.









ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
