விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பிராங்பேர்ட் (FRA), இன்சியான் (ICN), மெல்போர்ன் (MEL) மற்றும் சிட்னி (SYD) விமான நிலையங்களில் ஜெட் எரிபொருள் விநியோகத்திற்கான தற்போதைய ஒப்பந்தங்கள் 31-10-2024 அன்று காலாவதியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை மனுக்கள்
எனவே, 2 வருட காலத்திற்கு, மேற்படி விமான நிலையங்களின் பொருத்தமான ஒ்ப்பந்ததாரர்களை தேர்ந்தெடுப்பதற்கு வரையறுக்கப்பட்ட சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்காக 8 விமான எரிபொருள் விநியோக நிறுவனங்கள் விலைமனுவைச் சமர்ப்பித்துள்ளன.
அதன்படி, அமைச்சர்கள் குழுவால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், விமான எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களை வழங்குவதற்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
