ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்
ஈரான் மீது ஞாயிற்றுக்கிழமை முதல் சாத்தியமான புதிய இராணுவத் தாக்குதல்களைத் தொடுப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் விவகாரத்தில் வோஷிங்டன் தனது இராணுவ நடவடிக்கையை "முழுமையாகச் செய்து முடிக்க நேரிடலாம்" (finish the job) அல்லது தெஹ்ரானுடன் (Tehran) புதிய உடன்பாட்டை எட்டக்கூடும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய இராணுவத் தாக்குதல்
ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் மற்றும் பிராந்திய நடவடிக்கைகள் குறித்த அமெரிக்காவின் கோரிக்கைகளுக்குப் பணிந்து ஈரான் புதிய ஒப்பந்தத்திற்கு முன்வர வேண்டும், இல்லையெனில் கடுமையான இராணுவ விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
எனினும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே இடைக்கால ஒப்பந்தத்தை எட்டுவதற்காக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளை அமெரிக்காவே முறித்துவிட்டதாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் குற்றம் சாட்டியுள்ளார்.

பேச்சுவார்த்தை விதிகளையும் நடைமுறைகளையும் மீறி, அமெரிக்கர்கள் அனைத்தையும் பாழாக்கிவிட்டதாகச் சாடிய அவர், அவர்களைக் "கோழைகள்" என விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பேச்சுவார்த்தை தடைபட்டபோதிலும், ராஜதந்திர வழியில் ஒரு முடிவை எட்டுவதற்கு ஈரான் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பில் சரத் வீரசேகர! முகத்தை மூடிச்சென்ற கஸ்ஸப்ப தேரர் - வெளியான காணொளி..
இராணுவ அதிகாரியின் மகனையும் விட்டு வைக்காத கோட்டாபய! மகிந்தவும் மகனும் தப்பி ஓடிய இரகசிய தடுப்பு முகாம்..