பெசிலை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீவிர முயற்சி
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்சவை நாட்டுக்கு அழைத்து வர அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெசில் ராஜபக்சவிற்கு எதிராக இலங்கை நீதிமன்றங்களில் பல தடவகைள் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள பெசில் ராஜபக்சவை அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு விரைவில் அழைத்து வருவதற்கான சர்வதேச மட்டத்திலான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இலங்கை பொலிஸாரால் சர்வதேச பொாலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
பெசில் ராபஜக்ச, சிவப்புப் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவர் என்பதனால் அமெரிக்காவிலிருந்து வேறு நாட்டிற்கு எக்காரணம் கொண்டும் செல்ல முடியாது அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வார இறுதி பத்திரிகையொன்றுக்கு அவர் இந்த தகவல்களை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பெசில் ராஜபக்சவை நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட வேண்டும் எனுவும் தெரிவிக்கப்படுகின்றது.
லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பாக பெசில் ராஜபக்சவிற்கு எதிராக இலங்கை நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.