வங்காள விரிகுடாவில் உருவாகும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையம்
வானிலை ஆய்வுத் திணைக்களத்தின் தகவல்படி, வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகில் வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இந்த அமைப்பானது இன்று கிழக்கு - மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதிகளில் நகரும்போது, மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகரும் இந்த அமைப்பு, ஒக்டோபர் 26ஆம் திகதி காலைக்குள் சூறாவளியாகவும் (cyclonic storm), ஒக்டோபர் 27ஆம் திகதி காலைக்குள் மேற்கு - மத்திய வங்காள விரிகுடா பகுதியில் தீவிர சூறாவளியாகவும் (severe cyclonic storm) வலுவடைய வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
இந்த அமைப்பினால் இலங்கைக்கு நேரடி பாதிப்பு ஏதும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதனுடன் தொடர்புடைய காற்று வீச்சு நாடு முழுவதும் பரவுவதால், வரும் நாட்களில் இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சபரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்; சில இடங்களில் 100 மில்லிமீற்ருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில், பிற்பகல் 1.00 மணிக்கு மேல் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வட - மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க, பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கிங்ஸ்பரி ஹோட்டலில் நடந்த இரகசிய சந்திப்பில் சரத் வீரசேகர! முகத்தை மூடிச்சென்ற கஸ்ஸப்ப தேரர் - வெளியான காணொளி..