திருகோணமலையில் இடம்பெற்ற எதிர்கால அரசியலுக்கான கலந்துரையாடல்
எதிர்கால ஜனநாயக ரீதியிலான அரசியல் குறித்த திருகோணமலை (Trincomalee) மாவட்டத்துக்கான விசேட கலந்துரையாடல் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, இன்று (11.05.2024) திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
"எதிர்கால சந்ததியினருக்கான போற்றத்தக்க நாடு" எனும் தொனிப்பொருளின் கீழ் இந்த ஆலோசனை கூட்டம் நடாத்தப்பட்டுள்ளது.
பங்குபற்றல்
இதன்போது, நல்லாட்சியை நோக்கிய பயணத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய பாதை, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தெரிவு செய்ய வேண்டிய வழி உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகள் என பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும், சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
அடுத்த பிளானில் அறிவுக்கரசி, அழுது புலம்பும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri