மன்னார் விவசாயிகளுக்கு சிறுபோகம் வழங்கப்படாமை: மனித உரிமை ஆணைக்குவில் முறைப்பாடு
மன்னார் (Mannar) - புலவுக்காணி சிறுபோக விவசாயத்தில் அதிகாரிகள் பாரபட்சமாக செயற்பட்டுள்ளதால் தாம் பாதிப்புற்றுள்ளதாக அப்பகுதி விவசாய அமைப்பை சார்ந்தவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் (HRC) முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.
குறித்த முறைப்பாடானது, மன்னார் மாந்தை மேற்கு அடம்பன் நெடுங்கண்டல் கமக்கார அமைப்பினால் ரானஸ்பெரன்சி இன்டர்நெசனல் அமைப்பின் வவுனியா கிளையினரின் பங்களிப்புடன் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் பழிவாங்கல்
இந்த முறைப்பாட்டிற்கமைய, 2024ஆம் ஆண்டுக்கான மன்னார் மாவட்ட சிறுபோக நெற்செய்கைக்கான புலவு பங்கீட்டில் அதிகாரிகள் தங்களின் தனிப்பட்ட பழிவாங்கல்களை கருத்திற்கொண்டு செயற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, ரான்ஸ்பெரன்சி இன்டர்நெசனல் வவுனியா பிராந்திய காரியாலயத்தால் 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலுக்கான உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரிக்கைகள் அடங்கிய விண்ணப்பங்கள் மன்னார் மாவட்ட ஆளுநர், செயலாளர் மற்றும் வடமாகாண பிரதி கமநல ஆணையாளர் ஆகிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 2 மணி நேரம் முன்

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
