மத்திய கிழக்கின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப்போகும் அமெரிக்கா
மத்திய கிழக்கின் யுத்த அதிர்வுகள் ஒரு அழிவின் குறிகாட்டியை நோக்கி நகருவது அண்மைய சம்பவங்களால் உறுதிப்படுத்தப்படுகிறது.
எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா ஈரானை தாக்கலாம் அமெரிக்க விரோத நாடுகள் ஈரானை பகடையாக்கி ஒரு உலகம் தழுவிய அழிவின்போரை ஆரம்பிக்கும் ஒரு நிலை காத்திருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெஹ்ரானிலிருந்து மக்களை வெளியேறுமாறும் ஈரான் தம்மை அலைக்கழித்து அவமானப்படுத்திவிட்டதாகவும் ஒரு கோபமான செய்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இது ஒரு வித உளவியல் இராஜதந்திர நகர்வாகவே ட்ரம்ப் இதனை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று அமெரிக்க தூதரகம் தாக்ப்பட்டதும் இன்று அமெரிக்க ஆயுத ஆளனி வளங்கள் அதிக அளவில் மத்தியகிழக்கை நோக்கி நகர்த்தப்பட்டிருப்பதையும் கொண்டு அடுத்து வரும் 24 மணித்தியாலங்களில் அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவே மத்தியகிழக்கின் அரசியல் தலைவிதியை தீர்மானிக்கப்போகிறது என்பதையும் அது சார்ந்த விடயப்பரப்பையும் ஆராய்கிறது இன்றைய அதிர்வு...




