தென்னிலங்கை பெரும் சோகம் - முச்சக்கர வண்டியிலிருந்து வீசப்பட்ட யுவதி பலி
ஹொரணை - ரத்னபுர பிரதான வீதியில் சம்பவித்த விபத்தில் 20 வயதுடைய யுவதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இங்கிரிய பகுதியில் இடம்பெற்ற மத நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக குறித்த யுவதி முச்சக்கர வண்டியில் இங்கிரிய நோக்கி பயணித்துள்ளார்.
வளைவில் எண்ணெய் தாங்கி லொறியுடன் முச்சக்கர வண்டி மோதியதில், பின் இருக்கையில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டு, லொறியின் பின் சக்கரங்களுக்கு அடியில் நசுங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யுவதி பலி
விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே குறித்த உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கிரியெல்ல பகுதியைச் சேர்ந்த கிருஷாணி கவிந்தியா குமாரி என்ற 20 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரியெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரித்தானிய சுற்றுலாப்பயணிகள் இருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய இந்தியா News Lankasri
'வித் லவ்' படம் பார்த்துவிட்டு ரஜினிகாந்த் சொன்ன விமர்சனம்.. படம் எப்படி வந்துள்ளது தெரியுமா Cineulagam