ஈரான் விவகாரத்தில் பொறுமையிழக்கும் ட்ரம்ப்.. முழு வான்வெளியும் அமெரிக்க கட்டுப்பாட்டில்!
ஈரான் வான்வெளி முழுவதும் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில், "ஈரானிடம் நல்ல வான ஊடுறுவல்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக இருந்தன.
ஆனால் அவற்றை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, பொருட்களுடன் ஒப்பிட முடியாது. அமெரிக்காவை விட வேறு யாரும் இதைச் சிறப்பாகச் செய்யவில்லை” என தெரிவித்துள்ளார்.
பதுங்கியிருக்கும் அயதுல்லா
அதேவேளை, ஈரானிய உயர் மட்ட தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும்.
( @realDonaldTrump - Truth Social Post )
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) June 17, 2025
( Donald J. Trump - Jun 17, 2025, 12:19 PM ET )
We know exactly where the so-called “Supreme Leader” is hiding. He is an easy target, but is safe there - We are not going to take him out (kill!), at least not for now. But we don’t want… pic.twitter.com/CJljmslKfB
அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார் - நாங்கள் அவரை வெளியே எடுக்கப் போவதில்லை அதாவது, கொல்லப் போவதில்லை, குறைந்தபட்சம் இப்போதைக்கு அல்ல என சொல்லலாம்.
ஆனால், பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது” என மிகக் கடுமையாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan
