ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக மாறும்: உக்ரைனில் வைத்து எச்சரிக்கை
தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என போலந்து ஜனாதிபதி ஆண்ட்ர்செஜ் துடா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் - ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து வருகிறது. இந்த சந்தர்ப்பத்தில் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைனிற்கு விஜயம் செய்துள்ளார்.
இதன்போது கீவ் நகரில் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன், உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்றியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு.
ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன. ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக்கூடாது.
ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.