புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் பிரித்தானியாவின் திட்டம்: லண்டனில் திடீர் போராட்டம்
பிரித்தானியாவில் புகலிடக்கோரிக்கையாளர்களை மிதவைப்படகில் ஏற்றும் திட்டத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியா - லண்டனிலுள்ள தனியார் விடுதியில் புகலிடக்கோரிக்கையாளர்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கும் நிலையில், இன்று (10.05.2024) காலை 10.00 மணியளவில் பொலிஸார் சுமார் 5 பொலிஸ் வான்களில் அங்கு வந்துள்ளனர்.
ஒன்று திரண்ட சமூக ஆர்வலர்கள்
இதன்போது, புகலிடக்கோரிக்கையாளர்களை பிபி ஸ்டாக்ஹோம் பார்ஜ் (Bibby Stockholm barge) என்னும் மிதவைப்படகில் ஏற்ற வந்துள்ளமையை அறிந்த சமூக ஆர்வலர்கள் பொலிஸாரை தடுக்கும் நோக்கில், அந்த உணவகத்தின் முன் கூடியுள்ளனர்.
குறித்த தகவலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள அவர்கள், பொலிஸார் புகலிடக்கோரிக்கையாளர்களை அழைத்துச் செல்வதை இரத்து செய்யும்வரை அங்கிருந்து வெளியேறப்போவதில்லை என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையில், லண்டனின் பல்வேறு இடங்களில் இதே போல சமூக ஆர்வலர்கள் திரண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், ஒரு இடத்தில் முகமூடி அணிந்த சிலர் பொலிஸாரைத் தாக்கியதாகவும், அதைத் தொடர்ந்து சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
