ரஷ்யாவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய பேருந்து விபத்து
ரஷ்யாவில்(Russia) பயணிகளை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் - செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பிராந்தியத்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மொய்கா ஆற்றின் மேம்பாலத்தில் பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது அடங கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று பேர் உயிரிழப்பு
விபத்தின் போது பேருந்தில், 20 பேர் பயணித்துள்ளனர் எனவும், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் 6 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பேருந்து விபத்துக்குள்ளான காணொளியானது இணையத்தில் தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும் - காணொளி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
you may like this





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri
