அபுதாபி இளவரசர் ஷேக் ஹஸ்ஸா காலமானார்
அபுதாபி (Abu dhabi) இளவரசர் ஷேக் ஹஸ்ஸா பின் சுல்தான் பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan )காலாமானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் நேற்றையதினம் (09.05.2024) காலமானதாக அபுதாபி ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலமான அபுதாபி இளவரசர் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் மூத்த மகனாவார்.
இளவரசரின் மறைவு
இந்நிலையில் இவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்ததாவது,
“இறைவன், இவருக்கு பரந்த கருணையை கொடுக்க வேண்டும், அவருக்கு சொர்க்கத்தை வழங்க வேண்டும்.
மேலும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதலை வழங்க எல்லாம் வல்ல இறைவன் அல்லா அருள் புரிய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sheikhs and worshippers have performed the funeral prayer for Sheikh Hazza bin Sultan bin Zayed Al Nahyan at Sheikh Sultan bin Zayed the First Mosque in Abu Dhabi, and carried him to his final resting place in Al Bateen Cemetery. pic.twitter.com/Ynfv2hauRN
— مكتب أبوظبي الإعلامي (@ADMediaOffice) May 9, 2024
மேலும் அபுதாபி இளவரசரின் வயது குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை என்பதுடன் இவர் குதிரை சவாரி செய்யும் வல்லமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |