கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் தடை

Sri Lanka Police Colombo Sri Lanka Politician Sri Lankan political crisis
By Rakesh Sep 19, 2023 12:10 PM GMT
Report

கொழும்பில் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குக் கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மருதானை பிரதேசத்தில் நினைவேந்தலை நடத்துவதற்கு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமும் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை மற்றும் மருதானை பொலிஸார் நீதிமன்றங்களில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக களமிறங்கியுள்ள பௌத்த பிக்குகள்

திருகோணமலையில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக களமிறங்கியுள்ள பௌத்த பிக்குகள்


சர்வதேச ரீதியில் கடும் கண்டனம்

'ஒடுக்கப்படும் தமிழ் மக்களோடு நிற்போம்' என்ற கோஷத்துடன் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தால் இன்று (19.09.2023) பிற்பகல் 3 மணிக்கு மருதானையில் அமைந்துள்ள சமய, சமூக நடுநிலையத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் தடை | Police Stop Remembrance Day In Colombo

ஏற்கனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நோக்கிப் பயணித்த தியாகி திலீபனின் நினைவு ஊர்தி மீதும், அந்த ஊர்தியில் பயணித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீதும் சர்தாபுர பகுதியில் வைத்து சிலரால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

சமூக வலைதள பதிவுகள்

இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வைக் குழப்பும் வகையில் 'முதுகெலும்பு இருப்பவர்கள் ஆயத்தமாகுங்கள்.

கொழும்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் தடை | Police Stop Remembrance Day In Colombo

கொழும்புக்கு வருகைதரும் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதிவுகள் பேஸ்புக், ருவிட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளப் பக்கங்களில் அதிகளவில் பகிரப்பட்டன.

அதனையடுத்து திலீபன் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாகவும், வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அநாவசியமான குழப்பங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கிலும் இன்று மாலை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த நினைவேந்தல் நிகழ்வை இரத்துச் செய்வதாக கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கம் இன்று காலை அறிவித்தது.

இது இவ்வாறிருக்க பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் தியாகி திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடத்துவதற்குத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல்: நீதியான விசாரணை நடத்த சபாநாயகரிடம் கோரிக்கை

கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல்: நீதியான விசாரணை நடத்த சபாநாயகரிடம் கோரிக்கை

தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் அரசு தலைகுனிய வேண்டும்: இரா.சம்பந்தன்

தமிழர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல் தொடர்பில் அரசு தலைகுனிய வேண்டும்: இரா.சம்பந்தன்

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (Photos)

முல்லைத்தீவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
அகாலமரணம்

மன்னார், நீஸ், France

21 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US