லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு! வெளியான காரணம்
லாஃப்ஸ் எரிவாயு விலையை அதிகரித்தமைக்கான காரணத்தை அந்த நிறுவனத்தின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான நளிந்த குருகுலசூரிய வெளியிட்டுள்ளார்.
அதன்படி, உலகச் சந்தையில் எரிவாயு விலை, கப்பல் கட்டணம், காப்புறுதிக் கட்டணம் மற்றும் நாணய மாற்று விகிதங்கள் அதிகரித்தமையினால் ஏற்பட்டுள்ள செலவினங்களை ஈடுசெய்வதற்காகவே விலை அதிகரிப்பை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விலை திருத்தத்தின் மூலம் நிறுவனம் மேலதிக இலாபத்தை எதிர்பார்க்கவில்லை எனவும், நிறுவனத்தின் செலவினங்களை ஈடுசெய்வதற்காகக் கணக்கிடப்பட்ட விலை மட்டுமே இதுவெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எரிவாயுவின் விலை
எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையைத் தீர்மானிப்பதில் பல முக்கிய காரணிகள் செல்வாக்குச் செலுத்துவதாகச் சுட்டிக்காட்டிய அவர், சவூதி அராம்கோ (Saudi Aramco) நிறுவனத்தினால் ஒவ்வொரு மாதமும் ஆரம்பத்தில் வெளியிடப்படும் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயுவின் விலை அவற்றில் பிரதான காரணியாக அமைவதாகக் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரை நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலகச் சந்தையில் எரிவாயு விலை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், அந்த விலை அதிகரிப்பினால் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் ஒன்றிற்கு 706 ரூபா மேலதிகச் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கு மேலதிகமாக, எரிவாயு போக்குவரத்திற்காகச் செலவிடப்படும் கப்பல் கட்டணம் மற்றும் காப்புறுதிக் கட்டணங்களும் யுத்த சூழ்நிலை காரணமாக அதிகரித்துள்ளன. இதன் மூலம் சிலிண்டர் ஒன்றிற்கு மேலும் 417 ரூபா செலவு அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யுத்த சூழ்நிலை
நிறுவனம் இலாபம் ஈட்டும் நோக்கிலோ அல்லது நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கிலோ இந்த விலை திருத்தத்தை மேற்கொள்ளவில்லை எனவும் நளிந்த குருகுலசூரிய தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போதைய விலை திருத்தமானது இலாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டதல்ல எனவும், நிறுவனத்தின் செலவினங்களை ஈடுசெய்வதற்காகத் தீர்மானிக்கப்பட்ட விலை எனவும் அவர் கூறினார்.
உலகச் சந்தையில் நிலவும் யுத்த சூழ்நிலை உள்ளிட்ட காரணிகளாலேயே இந்த விலை அதிகரிப்பை மேற்கொள்ள நேரிட்டதாகவும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மைக்ரோசாஃப்ட் சேவை முடக்கம்... பிரித்தானியா முழுவதிலும் மருத்துவமனைகள், பாடசாலைகள் பாதிப்பு News Lankasri