கஜேந்திரன் எம்.பி மீதான தாக்குதல்: நீதியான விசாரணை நடத்த சபாநாயகரிடம் கோரிக்கை
திருகோணமலையில் பொலிஸார் முன்னிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் முறையான நீதி விசாரணை அவசியம் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (19.09.2023) காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர் அச்சுறுத்தல்
"சக நாடாளுமன்ற உறுப்பினரான உத்திக பிரேமரத்ன துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து உயிர் தப்பியுள்ளார்.
அதேவேளை, திருகோணமலையில் சக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளார்.
இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக முறையான நீதி விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றேன்" என குறிப்பிட்டுள்ளார்.

முத்துவிற்கு தெரியப்போகும் அடுத்த பெரிய உண்மை.. ரோஹினியா, சீதாவா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam
