விரைவில் தெரிந்து கொள்வீர்கள்! அமெரிக்க தளத்தை குறிவைத்த ஈரான்.. ட்ரம்பின் கடும் எச்சரிக்கை
சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீதான ஈரானிய தாக்குதலுக்கு விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்று ட்ரம்ப் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே தாக்குதல்கள் மாறி மாறி இடம்பெற்று வருகின்றன.
இதுகுறித்து இன்று கருத்து தெரிவித்த ட்ரம்ப், “தரைப் படைகள் (boots on the ground) அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காமல் கூட இருக்கலாம்” என கூறினார்.
ஈரானுக்கு எதிரான சனிக்கிழமை தாக்குதலுக்குப் பின்னர், “அவை தேவையில்லை என்று நான் சொல்லவில்லை; தேவையானால் பயன்படுத்தலாம்” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்னும் பெரிய தாக்குதல்கள்
தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக அமெரிக்காவை வெளிநாட்டு போர்களிலிருந்து விலக்குவதாக கூறியிருந்த போதிலும், தற்போது “இன்னும் பெரிய தாக்குதல்கள் காத்திருக்கின்றன; பெரிய அலை இன்னும் வரவில்லை” என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று அவர் கூறுகையில், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் திட்டமிட்ட நான்கு முதல் ஐந்து வார காலக்கெடுவை விட நீடிக்கக்கூடிய திறன் அமெரிக்காவுக்கு உள்ளதாக தெரிவித்தார்.
இதுவரை நடந்த மோதல்களில் ஆறு அமெரிக்கப் படையினரும், ஈரானில் 555 பேரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதன்முறையாக தனது நடவடிக்கைகளின் இலக்குகளை விளக்கிய ட்ரம்ப், ஈரானின் ஏவுகணை அமைப்புகள், கடற்படை மற்றும் அணு திட்டத்தை அழித்தல், பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்துதல் ஆகியவையே நோக்கமாக இருப்பதாக கூறினார்.
எனினும், ஈரானின் இஸ்லாமிய குடியரசு ஆட்சியை கவிழ்த்தல் இலக்காக இல்லை எனவும் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை முதல் ஈரானுக்கு எதிராக தாக்குதல்களை தொடர்ந்து வருகின்றன. இதில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு எதிராக போராட தயங்கும் ஸ்டார்மர்.. ட்ரம்பின் சீற்றத்தால் பிரித்தானியாவுடன் ஏற்படும் முறுகல்
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri