திருகோணமலையில் ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக களமிறங்கியுள்ள பௌத்த பிக்குகள்
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக ஒரு இலட்சம் கையெழுத்து போராட்டத்தை கிழக்கின் பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை - நிலாவெளி பகுதியிலுள்ள பெரியகுளம் பொரலுகந்த ரஜமகா விகாரையின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிப்பதை தவிர்க்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார்.
இது தொடர்பில் பொரலுகந்த ரஜமகா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சீலவங்கதிஸ்ஸ தேரருக்கு, பிரதேச செயலாளர் ஊடாக செந்தில் தொண்டமான் அறிவித்திருந்தார்.

சிங்கள பகுதிக்குள் பிரவேசித்த திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் : பொலிஸாருக்கு ஆளுநர் செந்தில் விடுத்துள்ள பணிப்புரை
ஒரு இலட்சம் கையெழுத்து போராட்டம்
இதன் காரணமாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக திருகோணமலை மாவட்ட செயலகத்துக்கு முன்பாக ஏ – 6 பிரதான வீதியை வழிமறித்து பௌத்த பிக்குகளும் பெரும்பான்மையின மக்களும் பாரிய போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு எதிராக இன்றையதினம் ஒரு இலட்சம் கையெழுத்து போராட்டத்தை பௌத்த பிக்குகள் ஆரம்பித்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட மக்கள், சிவில் அமைப்புகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன் ஆகியோரின் கோரிக்கைக்கு அமையவே, செந்தில் தொண்டைமானால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
புத்தசாசன அமைச்சு அனுமதி
இந்த கோரிக்கைக்கு அமைய, குறித்த பகுதியில் விகாரையொன்றை நிரமாணிப்பதற்கு 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 09ம் திகதி புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், குறித்த பகுதியானது 99.9 வீதம் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதி என ஆளுநர் செந்தில் தொண்டமானினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கிடையில் உச்சக்கட்ட முறுகல்! கனேடிய தூதரக அதிகாரியை நாட்டை விட்டு உடன் வெளியேற இந்தியா உத்தரவு
you may like this





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

கதிர் சட்டையை பிடித்த குணசேகரன், தர்ஷனை தண்டிக்க நினைக்கும் பார்கவி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சீரியல் நாயகர்கள் அனைவரும் ஒரே மேடையில், அமர்க்களமான அரங்கம்... ஜீ தமிழ் குடும்ப விருதுகள் முன்னோட்டம் Cineulagam
