சனல் 4 வில் சம்பந்தப்பட்டவர்கள் ஆட்கடத்தலுடன் தொடர்பு: பகிரங்க குற்றச்சாட்டு (Video)
மட்டக்களப்பு மாவட்ட வழிந்துக்காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் கால்நடைப் பண்ணையாளர்களால் 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டம் மனித சங்கிலிப்போராட்டமாக இன்று (19.09.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது எங்களினுடைய உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான முக்கிய காரணம் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒட்டுக்குழுக்களே என காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளதோடு அரசாங்கத்தோடு இணைந்தே இந்த ஒட்டுக்குழுக்கள் இந்த செயலை செய்து இருக்கின்றனர் எனவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்தோடு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் அரசாங்கம் இது வரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இந்த விடயம் தொடர்பில் சர்வதேசத்திற்கு தெரியப்படுத்தும் வகையிலே ஆர்ப்பாட்டமானது 5ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர் சங்கம், முன்னால் மாகாணசபை முதல்வர் பி. சரவணபவன், பட்டிப்பளைப் பிரதேச கால்நடை வளர்ப்பாளர் சங்கம் மற்றும் பெருந்திரளான மக்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

















சிம்புவுக்கு சொந்தமாக இருக்கும் தியேட்டர் பற்றி தெரியுமா? வேலூரில் இருக்கும் தியேட்டர்கள் லிஸ்ட் Cineulagam
